Published:Updated:

எல் சல்வடார் : 'முன்னாள் காவல்துறை அதிகாரி தோட்டத்தில் அடையாளம் தெரியாத 24 சடலங்கள்; பின்னணி என்ன?!'

இரட்டைக்கொலைச் சம்பவத்தில் ஹ்யூகோவுக்குத் தொடர்பிருப்பதாகச் சந்தேகித்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவந்தனர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

லத்தீன் அமெரிக்க நாடுகளில், முக்கியமான நாடு எல் சல்வடார். இங்கு கடந்த சில ஆண்டுகளாக சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை அடிக்கடி மாயமாகப்போவதும், பின்னர், அவர்கள் கொலை செய்யப்பட்டு சடலமாகக் மீட்கப்படுவதும் அவ்வப்போது நிகழ்ந்துவருகிறது. அதேபோல், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிக அளவில் நடந்துவருகின்றன. இந்தநிலையில் அந்நாட்டின் தலைநகரான சான் சல்வடோர் நகரிலுள்ள காவல்துறையில் ஹ்யூகோ எர்னஸ்டோ ஒசோரியோ சாவேஸ் (51) (Hugo Ernesto Osorio Chávez) என்பவர் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றிவந்துள்ளார். அவர் பணியிலிருந்த காலத்தில் அந்தப் பகுதியில் அதிகப்படியான கொலைக் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் அவர் தனது வீட்டில் வசித்துவந்துள்ளார்.

கொலை
கொலை

கடந்த 2015-ம் ஆண்டு சான் சல்வடார் நகரில் நிகழ்ந்த இரட்டைக் கொலைச் சம்பவத்தில் ஹ்யூகோவுக்குத் தொடர்பிருப்பதாகச் சந்தேகித்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவந்தனர். மேலும், ஹ்யூகோ பணியாற்றிய காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் அதிக அளவில் சிறுமிகளும் பெண்களும் மாயமான சம்பவத்தில் அவருக்குத் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டதால், கடந்த வியாழக்கிழமை (20.05.2021) அன்று அவரது வீட்டைச் சோதனையிட முடிவு செய்தனர்.

சான் சல்வடார் நகரிலிருந்து வடக்கே சுமார் 78 கி.மீ தொலைவிலுள்ள சால்ச்சுவாபா (Chalchuapa) பகுதியில் அமைந்திருந்த அவரது வீட்டில் சோதனையிட்டபோது, அந்த வீட்டின் தோட்டப் பகுதியில் பிணங்கள் புதைக்கப்பட்டிருப்பது போன்ற மேடுகளைக் கண்டுள்ளனர். இதனால் சந்தேகம் மேலும் அதிகமானாதால் அதைத் தோண்டிப் பார்த்ததில் அங்கு கொத்துக் கொத்தாக பிணங்கள் புதைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அந்த வகையில், 24 சடலங்களின் சிதைந்த பாகங்கள், எலும்புக்கூடுகள் கண்டெக்கப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அங்கே 40-க்கும் மேற்பட்ட சடலங்கள் இருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர். எனினும், இது குறித்த தெளிவான அறிக்கை ஏதும் இதுவரை வெளிவரவில்லை. இவர்கள் யார் என்பது குறித்த தகவல்களைக் கண்டறிய ஒரு மாதத்துக்கு மேல் ஆகலாம் என்கின்றனர் தடவியல் ஆய்வாளர்கள்.

எல் சல்வடார் : 'முன்னாள் காவல்துறை அதிகாரி தோட்டத்தில் அடையாளம் தெரியாத 24 சடலங்கள்; பின்னணி என்ன?!'
Salvador Melendez

ஹ்யூகோ தொடர்புடைய அந்த இரட்டைக் கொலைச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் உடல்களும் இதில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கொலைச் சம்பவங்கள், 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். இதையடுத்து அந்தப் பகுதியில் வசித்துவரும் மக்கள், காணாமல்போன தங்களின் உறவினர்களின் உடல்கள் இருக்கின்றனவா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வீட்டின் முன்பு குவிந்தனர். காவல்துறையினர் சந்தேகித்ததுபோலவே, குற்றச் செயலில் ஈடுபட்டது ஹ்யூகோதான் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், ஹ்யூகோ தற்போது தலைமறைவாகியிருப்பதால், அவரை உடனடியாகக் கைதுசெய்து சிறையில் அடைக்க சான் சல்வடோர் எல்லை காவல் நிலைய போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு