இந்திய பெண்ணை மணந்தார் பூடான் மன்னர்!

திம்பு, அக்.13,2011

பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியேல் தனது பால்ய கால சிநேகிதியும், இந்தியாவின் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவருமான ஜெட்சுன் பெமாவை இன்று மணந்தார்.

தலைநகர் திம்புவில் புத்த மத முறைப்படி இந்தத் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. 

பூடானின் பிரபல மன்னரான 31 வயது ஜிக்மே கேசர் நாம்கியேல், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர்.

மணமகள் ஜெட்சுன் பெமா (வயது 21) இந்தியாவைச் சேர்ந்த விமானியின் மகள். ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சன்வார் நகரில் பள்ளிக்கூட படிப்பை முடிததுவிட்டு லண்டனில் உள்ள ரீஜென்ட்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருபவர்.

இவர்களின் திருமணம் திம்பு நகரில் இருந்து 71 கி.மீ. தொலைவில் உள்ள சரித்திர நகரான புனாகா வில் உள்ள 17-ம் நூற்றாண்டு கோட்டையில் நடந்தது.

சுமார் 1500 விருந்தினர்கள் முன்னிலையில் நடந்த இந்தத் திருமணத்தில், இந்தியா சார்பில் மேற்குவங்க ஆளுனர் எம்.கே.நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இந்தத் திருமணத்தையொட்டி பூடான் நாட்டில் 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!