ஓரின சேர்க்கை திருமணத்திற்கு 62% பேர் ஆதரவு! | Irish vote prompts same-sex marriage call for Ireland

வெளியிடப்பட்ட நேரம்: 15:41 (25/05/2015)

கடைசி தொடர்பு:16:11 (25/05/2015)

ஓரின சேர்க்கை திருமணத்திற்கு 62% பேர் ஆதரவு!

டப்ளின்: ஓரின சேர்க்கை திருமணத்திற்கு அயர்லாந்தில் பொது வாக்கெடுப்பு மூலம் 62 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து வெற்றி பெற செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    

கத்தோலிக்க கிறிஸ்தவ நாடான அயர்லாந்தில், ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பல நாடுகளில் இந்த திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்கப்பட்டதைத்  தொடர்ந்து, அயர்லாந்திலும் இந்த திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

எனவே ஓரினச்சேர்க்கை திருமணத்தை அங்கீகரிப்பது தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டு வர அயர்லாந்து அரசு முடிவு செய்தது. எனினும் இது தொடர்பாக மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த முடிவு செய்து, மக்களிடையே கடந்த சனிக்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் நேற்று காலையில் இருந்து எண்ணப்பட்டன. இதில் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவான வாக்குகளே அதிகம் பதிவாகியிருந்தது. இதில் 62 சதவீதம் பேர் ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

வாக்களித்தவர்களில் 12 லட்சத்து ஆயிரத்து 607 பேர் ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்தைச்  சட்டப்படி அங்கீகரிக்குமாறும், 7 லட்சத்து 34 ஆயிரத்து 300 பேர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாக்களித்துள்ளனர்.

இதன் மூலம் ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்தைச்  சட்டப்படி அங்கீகரிக்கும் முதல் நாடாக அயர்லாந்து ஆகியுள்ளது. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள அயர்லாந்து துணை பிரதமர் ஜோவன் பர்டன், மக்கள் பிரிவினைவாதத்திற்கு மரண அடி கொடுத்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.

உலகிலேயே பொது வாக்கெடுப்பு மூலம் ஓரினச்சேர்க்கை திருமணத்தை அங்கீகரித்த முதல் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்