இந்திய சுதந்திரதினம்:பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாழ்த்து!

இஸ்லாமபாத்: இந்தியாவின் 69 ஆவது சுதந்திர தினத்தையொட்டி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின்  69 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.  அதில்,  “ இன்று சுதந்திர தினம் கொண்டாடும் தங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரு நாடுகளிடையேயான பிரச்சினைகளுக்கு பேச்சு வார்த்தை மூலம் உடன்பாடு காண்போம். நம்பிக்கையான புரிந்துணர்தலுடன் கூடிய பேச்சு வார்த்தை மூலம் பிரச்னைகளைத்  தீர்ப்போம். ஒருவருக்கொருவர் புரிந்துணர்தலின்  மூலம் புதிய சகாப்தம் படைப்போம். நட்புறவை ஊக்குவித்துக்  கூட்டுறவுடன்  இருநாடுகளுக்கிடையே நல்லுறவை ஊக்குவிப்பதே எங்களின் முதன்மை விருப்பம் ஆகும் ” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று(வெள்ளி) பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாகிஸ்தான் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!