வனவிலங்குகளுடன் விளையாடும் 5 வயது சிறுவன்!

சிட்னி: வனவிலங்குகளுக்கு உணவளிப்பது, முதலைகளை பிடிப்பது என வன விலங்குகளுடன் 5 வயது சிறுவன் விளையாடி வருகிறான்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தம்பதி க்ரெக் - ஜூலியா. வனவிலங்கு ஆர்வலர்களான இவர்கள், விக்டோரியா நகரில் உள்ள பலாரட் என்ற வனவிலங்கு பூங்காவை நிர்வகித்து வருகின்றனர்.

இவர்களது மகன் சார்லி பார்க்கர். தற்போது 5 வயதாகும் இந்த சிறுவன், தனது 3 வயதில் இருந்தே வனவிலங்குகளுடன் விளையாடி வருவது பொதுமக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பள்ளிக்கு செல்லும் சார்லி, பள்ளி முடிந்து வந்ததும் வனவிலங்குகளுக்கு உணவளிப்பது, உப்புநீர் முதலைகளை பின்பக்கமாக வளைத்து பிடிப்பது, சுற்றுலா பயணிகளை காட்டுக்கு அழைத்து செல்வது என ஒரு ரேஞ்சர் போன்று செயல்பட்டு வருகிறான்.

இதனால், அந்த பூங்காவிற்கு வரும் அனைவரும் சார்லியை, ஜூனியர் ஸ்டீவ் இர்வின் என்று அழைக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!