வெளியிடப்பட்ட நேரம்: 16:02 (15/09/2015)

கடைசி தொடர்பு:16:23 (15/09/2015)

ஐ போன் வாங்குவதற்காக சிறுநீரகத்தை விற்க முயற்சி!

போன் 6 எஸ் வாங்குவதற்காக சீனாவில் இரு இளைஞர்கள் தங்கள் சிறுநீரகத்தை விற்க முயற்சித்துள்ளனர்.

சீனாவின் ஜியாங்சூ மாகாணத்தை சேர்ந்தவர்  வூ, இவரது நண்பர் குவாங். இருவருக்குமே  ஐ போன் மீது பைத்தியம் உண்டு.

ஆப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள ஐபோன் 6 எஸ் மாடலை வாங்க வூ முயற்சித்துள்ளார். ஆனால் முடியவில்லை. அந்த சமயத்தில் அவரது நண்பரான குவாங், கிட்னியை விற்று விடலாம் என்று ஆலோசனை கூறியுள்ளார்.

சிறுநீரகங்களை விற்க இணையதளத்தில் தரகர்களை அணுகியுள்ளனர். அதில் ஒருவர், நான்ஜியாங் நகரில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு வர கூறியுள்ளார். கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தரகர் கூறிய மருத்துவமனைக்கு சென்று நண்பர்கள் காத்திருந்தனர். ஆனால் கூறியபடி தரகர் அங்கு வரவில்லை.

இந்த சமயத்தில் வூவின் மனம் மாறி விட்டது. இதையடுத்து தனது நண்பர் குவாங்கிடம் சிறுநீரகத்தை விற்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை.

இதையடுத்து வூ, போலீசுக்கு தகவல் தெரிவித்து விட, உடனடியாக அந்த மருத்துவமனைக்கு போலீசார் வந்துள்ளனர். அதற்குள் குவாங் அங்கிருந்து தப்பி விட்டார். தற்போது வரை அவர் கிடைக்கவில்லை.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்