இலங்கையில் முதன் முறையாக 'மதுரை மல்லி' சாகுபடி!

யாழ்ப்பாணம்: இலங்கையில் முதன் முறையாக மதுரை மல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
 

இலங்கையில் மலர் சாகுபடியை பெரிய அளவுக்கு முன்னெடுக்கும் திட்டமொன்று நாட்டின் வட பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அனுமதியுடன் மதுரை மல்லிச் செடிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

மதுரையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மல்லைகைப் பூச்செடிகள், வவுனியாவிலுள்ள பண்ணை ஒன்றில் வர்த்தக ரீதியில் நடப்பட்டுள்ளன. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கில், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரக அலுவலகத்தின் முயற்சியில், உள்ளூர் வர்த்தகர் ஒருவர் இதில் இறங்கியுள்ளார்.

இலங்கையில் மலர்களுக்கான தேவை அதிகமாக இருந்தாலும், அதற்கான உற்பத்தி வர்த்தக ரீதியில் இல்லாத குறை உணரப்பட்டதாலேயே இந்த புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 

மதுரையில் மல்லிகை சாகுபடியில் நல்ல அனுபவம் கொண்டவர்களின் உதவியுடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்த மல்லிகைப் பண்ணையை ஏற்படுத்தியுள்ள உள்ளூர் வர்த்தகர் பிரேமந்திரராஜா தெரிவித்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள், மல்லிகை சாகுபடியில் ஆர்வம் காட்டினால் தேவையான உதவிகள் செய்யப்படும் என இந்தியத் துணைத் தூதர் நடராஜன் கூறியுள்ளார்.

இந்தத் திட்டத்துக்காக இந்தியாவிலிருந்து 30,000 மதுரை மல்லிகைச் செடிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!