இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வைரம் தோண்டியெடுப்பு! | Massive 1,111-carat diamond mined in Botswana

வெளியிடப்பட்ட நேரம்: 15:03 (20/11/2015)

கடைசி தொடர்பு:15:18 (20/11/2015)

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வைரம் தோண்டியெடுப்பு!

லண்டன்: கடந்த 100 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் மிகப்பெரிய வைரம் ஆப்பிரிக்க நாடான போஸ்ட்ஸ் வானாவில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வைரம் 1,111 காரட் தரம் கொண்டது. 100 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டியெடுக்கப்பட்ட மிகப்பெரிய வைரமாக இது கருதப்படுகிறது. கடந்த 1905-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்க வைர சுரங்கத்தில் ‘குல்லினான்’ என்ற வைரம் வெட்டியெடுக்கப்பட்டது.

3,106 காரட் தரம் கொண்ட அந்த வைரம், பல துண்டுகளாக பட்டை தீட்டப்பட்டு இங்கிலாந்து மன்னர்களின் கிரீடங்களை அலங்கரித்து வருகிறது. தற்போது கிடைத்துள்ள இந்த வைரம் ‘குல்லினான்’ வைரத்துக்கு அடுத்தபடியாக 2 வது இடத்தில் உள்ளது.

இந்த தகவலை Lucara Diamond Corporation என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வைரத்தின் மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை. ஆனால் இதன் மதிப்பு பல கோடி இருக்கும் என பிரபல வைர நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வைர உற்பத்தியில், போட்ஸ்வானா உலகில் 2 வது இடத்தில் உள்ளது. இங்கு தற்போதுதான் முறையாக மிகப்பெரிய தரம் வாய்ந்த வைரம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்