வெளியிடப்பட்ட நேரம்: 14:31 (28/12/2015)

கடைசி தொடர்பு:14:52 (28/12/2015)

1,96,000 அகதி குழந்தைகள் மீது ஜெர்மனியின் அக்கறை!

ஜெர்மனியில் அகதிக்குழந்தைகளுக்கு பாடம் நடத்துவதற்காக 8,500 ஆசிரியர்கள் உலக அளவில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 

போர் மற்றும் வறுமையின் காரணமாக ஜெர்மனிக்கு இடம்பெயர்ந்த 1,96,000 அகதிக் குழந்தைகளுக்கு 8,264 சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் உலக அளவில் 8,500 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஜெர்மனியின் கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவலில், 2015 -ம் ஆண்டில்  பள்ளியில் படிக்கும் வயதுடைய குழந்தைகள் 3,25,000 பேர் ஜெர்மனிக்குள் குடிபெயர்ந்தனர். இது இரண்டாம் உலகப்போரை விட மிக மோசமானதாகும்.

மேலும், 2015-ம் ஆண்டில் ஒரு மில்லியன் புகலிடக் கோரிக்கையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களுக்குசேவைகளை வழங்குவதற்காக ஜெர்மன் அரசு தயாராக இருக்கிறது.
 

மேலும் பள்ளிகள் மற்றும் கல்வி நிர்வாகங்கள் புதிய சவாலை ஏற்றுக்கொண்டுள்ளது என்றும், கல்வித்துறை தலைமை அதிகாரி புருன்ஹில்டு குர்த் கூறியுள்ளார்.

DPhV ஆசிரியர்கள் யூனியனின் தலைவர் ஹென்ஸா பீட்டர் மிடிஞ்சர் இதுகுறித்து கூறுகையில், " இனிவரவிருக்கும் புதிய குழந்தைகளுக்காக 20,000 ஆசிரியர்கள் எங்களுக்கு தேவைப்படுகிறார்கள்.  வருகின்ற கோடைக்காலத்திற்குள் நாங்கள் அதனை நிவர்த்திசெய்துவிடுவோம்" என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்