ப்ரேக்ஃபாஸ்டாக வந்த ஆட்டை ஃப்ரெண்டாக்கிய புலி! (வீடியோ)

னவிலங்கு சரணாலயத்தில் புலிக்கு இரையாக அனுப்பி வைக்கப்பட்ட ஆடு, புலியுடன் நட்புடன் பழகி வருகிறது. இந்த ஆச்சர்ய சம்பவம் ரஷ்யாவில் நடந்துள்ளது.

ரஷ்யாவில் இருக்கும் வனவிலங்கு சரணாலயத்தில் இருக்கும் புலிகளுக்கு உணவாக,  உயிருடன் ஆடுகளை அனுப்பி வைப்பது வழக்கம். இது போல் ஒரு மாதத்துக்கு முன்பு ஆடு ஒன்று,  புலிக்கு உணவாக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், என்ன மாயாஜாலம் நடந்ததோ தெரியவில்லை, அந்த புலி, ஆட்டை சாப்பிடவில்லை. எங்கெல்லா புலி செல்கிறதோ அங்கெல்லாம் ஆடும் பின் தொடர்ந்து செல்வதோடு, புலியுடன் சேர்ந்து விளையாடி வருகிறது. புலியும் ஆட்டுடன் நட்புடன் பழகி வருகிறது.

இந்த அதிசய நிகழ்வை காண வனவிலங்கு சரணாலயத்துக்கு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்கின்றனர்.

அந்த வீடியோ கீழே...

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!