சீனாவில் விண்ணைதொட்டு நிற்கும் தங்க சிலை! (வீடியோ)

சீன நாட்டின் கம்யூனிஸ்ட் தலைவர் மாவோவிற்கு, மூன்று மில்லியன் யுவான் செலவில், தங்கத்தால் பூசப்பட்ட 121 அடி சிலையை நிறுவி உள்ளனர். ஹினன் பகுதியின் தொழிலதிபர்கள் மற்றும் பொது மக்களின் உழைப்பில் மார்ச் மாதம் தொடங்கப்பட்ட சிலை செய்யும் பணி,  ஒன்பது மாத உழைப்பிற்கு பின் டிசம்பர் மாதம் முடிவடைந்துள்ளதாக தெரிகிறது.

இரும்பால் செய்யப்பட்ட இந்த சிலை,  தங்கத்தால் பூசப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சிலை அமைந்திருக்கும் இடமான ஹினன் பகுதி,  1950களில் பெரும் பஞ்சத்தை சந்தித்தது என்பது
குறிப்பிடத்தக்கது. மாவோவின் பொருளாதார கொள்கைகளால் பெரும் இழப்பை சந்தித்த அதே பகுதியில் இச்சிலையை நிறுவியிருப்பதற்கு கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. மேலும் இதற்காக செலவு செய்யப்பட்ட பணத்தை,  வறுமையை ஒழிக்க பயன்படுத்தினால் என்ன? எனவும் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.


எனினும் மிக பிரம்மாண்டமாய் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையின் புகைப்படங்கள் நம்மை வியப்பில் தான் ஆழ்த்துகின்றன. 1976 -ல் காலமான மாவோவிற்கு, நாடெங்கும் பல சிலைகள் நிறுவப்பட்டிருந்தாலும் இந்த சிலை இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாய் விண்ணைதொட்டு நிற்கின்றது.

  -கோ. இராகவிஜயா
(மாணவப் பத்திரிக்கையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!