வெளியிடப்பட்ட நேரம்: 12:04 (21/03/2016)

கடைசி தொடர்பு:15:22 (21/03/2016)

உங்க வீட்ல லைட்டு போட்டா எவரெஸ்ட் உருகுமாம்? எர்த் ஹவரில் ஆஃப் ஆன உலகம்

ங்க வீட்ல தேவையில்லாம லைட் எரிஞ்சா அன்டார்டிகால பனி மலை உருகும். ஃப்ரிட்ஜ திற‌ந்து வைச்சா எவரெஸ்ட் சிகரம் ரெண்டு இன்ச் குறையும்னு சொன்னா நம்புவீங்களா? ஆனா அதுல கொஞ்சம் உண்மையும் இருக்கு. மாறிவரும் பருவநிலை மாற்றங்கள் நம் பூமியில் உள்ள ஆராய்ச்சியாளர்களை பெரிதும் கவலைப்பட வைத்திருக்கிறது. குளோரோ ஃப்ளொரோ கார்பன் எனப்படும் நச்சு பொருளை நாம் பயன்படுத்தும் குளிர்சாதனப்பொருள்கள் மூலம் வெளிப்படுத்தி பூமியை சூடாக்கிக் கொண்டு இருக்கிறோம்.

'எர்த் ஹவர்' என்ற பெயரில் உலகின் பலவேறு நாடுகள்,  உலகம் வெப்பமையமாவதை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்கள். அதன்படி, கடந்த மார்ச் 19-ம் தேதி இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை, 178 நாடுகள் பங்குபெற்று, 400க்கும் அதிகமான முக்கிய இடங்களில் தேவையற்ற விளக்குகளை அனைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

குறிப்பு: படத்தில் உள்ள கர்சரை இடப்பக்கம் நகர்த்தினால் விளக்குகள் அணைக்கப்பட்ட புகைப்படமும், வலப்பக்கம் நகர்த்தினால் சாதாரண நிலையில் இருக்கும் புகைப்படமும் தெரியும்.
 

பிக் பென் லண்டன்

ஈஃபில் டவர் , ஃபிரான்ஸ்

கதெட்ரல் , ஜெர்மனி

மரினா ஹோட்டல் , சிங்கப்பூர்

எஸ்ப்ளேனேட் பூங்கா சிங்கப்பூர்

தைபி 101 கட்டிடம் , தைவான்

வர்த்தக நகரம் : ஷாங்காய் சிட்னி ஒபேரா : ஆஸ்திரேலியா

சிட்னி ஸ்கைலைன் : ஆஸ்திரேலியா

பெட்ரோனாஸ் டவர் : மலேசியா

காஸ்மோ டவர் ஃபெரிஸ் வீல்: ஜப்பான்

தேசிய மைதானம் : சைனா

 

என்ன பாஸ். இந்தியா போட்டோவ காணோம்னு பாக்குறீங்களா? அன்னிக்கு நாம இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் பாத்துட்டு இருந்திருக்கோம். சரி விடுங்க பாஸ்...வெயில் காலம் ஆரம்பிச்சா நமக்கு தினமும் 3 தடவ 'எர்த் ஹவர்' தானே!

-கார்த்தி

நீங்க எப்படி பீல் பண்றீங்க