'போதையில் பொது இடங்களில் ரகளையில் ஈடுபடும் பெண்கள் அதிகரிப்பு!' | Newcastle girls top league table of Britain's most drunk women,and that's official

வெளியிடப்பட்ட நேரம்: 13:18 (11/04/2016)

கடைசி தொடர்பு:13:46 (11/04/2016)

'போதையில் பொது இடங்களில் ரகளையில் ஈடுபடும் பெண்கள் அதிகரிப்பு!'

        

லண்டன்: மது அருந்திவிட்டு பொதுமக்கள் கூடும் இடங்களில்,  மிதமிஞ்சிய போதையால் ரகளை செய்யும் பெண்களின் எண்ணிக்கை இங்கிலாந்தில் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து இங்கிலாந்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 
கடந்த 2009 மற்றும் 2014 ஆகிய 5 ஆண்டுகளில், இங்கிலாந்து போலீசார் பெண்களிடம் அபராதம்  வசூலித்த  விவரங்களை  தற்போது வெளியிட்டுள்ளனர். அதில், இங்கிலாந்து நாட்டிலேயே அதிகளவில் மது அருந்துவிட்டு பொது இடங்களில் தகராறில் ஈடுப்பட்டவர்களில் முதல் இடத்தில் இருப்பவர்கள் நியூகேஸ்டில் நகரை சேர்ந்த பெண்கள்தான் என்பது தெரியவந்துள்ளது.

இந்த 5 ஆண்டுகளில் மட்டும்,  4,629 பெண்களிடம் தலா 80 பவுண்ட் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் லங்காஷயர் நகர் உள்ளது. இங்கே 3,596 பெண்களிடம் போதையில் தகராறு செய்ததாக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.அதே போல 3ம்  இடத்தை மெர்சிசைடு நகரம் பிடித்துள்ளது. இங்கு மொத்தம் 3,410 பெண்களிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த புள்ளிவிவரத்தில் இங்கிலாந்து தலைநகரமான லண்டன் 4-ம்  இடத்தை பிடித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த 5 ஆண்டுகளில்,  இங்கிலாந்து முழுக்க பொது இடங்களில் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட 34,381 பெண்களிடம் 2.75 மில்லியன் பவுண்ட் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்