ஆப்பிரிக்க காட்டில் யானையிடம் சிக்கிய அர்னால்ட் என்ன ஆனார்?(வீடியோ)

டர்பன்: ஹாலிவுட் படங்களில் ஆக்ரோஷமாக பிரமாண்ட சண்டைக்காட்சிகளில் தூள்கிளப்பும் நடிகர் அர்னால்ட்,ஆப்பிரிக்காவில் காட்டு யானையிடம் சிக்கி மீண்டு உயிர்பிழைத்த அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் வீடியோவாகப் பகிர்ந்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார்.

68 வயதான நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஷ்நெகர், தென் ஆப்பிரிக்காவில் தனது குழுவுடன் அண்மையில் காட்டுப் பயணம் செய்துள்ளார்.அப்போது,மதம் கொண்ட ஆண் யானை ஒன்றால் வழிமறிக்கப்பட்டு துரத்தப்பட்டுள்ளார். அந்த திகில் வீடியோவை,' யானை துரத்தலை படமாக எடுத்திருந்தால் கூட இத்தனை சிறப்பாக இருந்திருக்காது' என்ற தலைப்பில்  யூ டியூபில் பதிவேற்றியுள்ளார் அர்னால்ட்.

அந்த வீடியோ இங்கே....
 

      

Do you like the story?

Please Appreciate the Author by clapping!