தீ பிடிக்க பிடிக்க தரையிறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்! (வீடியோ)

சிங்கப்பூர் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீ பிடிக்க பிடிக்க தரையிறங்கியது. அதிருஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.

       
சிங்கப்பூரில் இருந்து அதிகாலை 2 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு சொந்தமான  விமானம் ஒன்று இத்தாலியின் மிலன் நகருக்கு புறப்பட்டது. விமானத்தில் 222 பயணிகளும் 19 ஊழியர்களும் இருந்தனர்.

வானத்தில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இன்ஜினில் கோளாறு இருப்பதை விமானி அறிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து விமான நிலையக்கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார்.

தொடர்ந்து விமானம் மீண்டும் சாங்கி விமான நிலையத்துக்கு திரும்பியது. விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விமானம் ரன்வேயை தொட்டபோது தீப்பற்றி எரியத் தொடங்கியது. விமானத்தின் வலதுபுற இன்ஜின் முற்றிலும் எரிந்து நாசமானது.

இந்த விபத்தில் பயணி ஒருவர் காயமடைந்தார். மற்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். விமானியின் சமயோசித புத்தியினால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!