நாசாவின் ட்விட்டர் பக்கத்தில் 'ச்ச்சீ ' படங்கள்... மர்ம நபர்கள் கைவரிசை! | NASA Kepler Twitter Account Hacked, Tweets Sexy Butt

வெளியிடப்பட்ட நேரம்: 12:41 (08/07/2016)

கடைசி தொடர்பு:12:51 (08/07/2016)

நாசாவின் ட்விட்டர் பக்கத்தில் 'ச்ச்சீ ' படங்கள்... மர்ம நபர்கள் கைவரிசை!

நியூயார்க்: நாசாவின் பிரத்யேக ட்விட்டர் பக்கத்தில் ஆபாசப் படங்கள் பதிவேற்றப்பட்டதால் விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் தற்காலிமாக அந்த ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது.

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்,  கெப்ளர் அன்ட் கே 2 என்ற தனது பிரத்யேக ட்விட்டர் பக்கத்தை  இயக்கி வருகிறது. இந்த பக்கத்தில் சில நாட்களுக்கு முன் ஊடுருவிய மர்ம நபர்கள், ஆபாசப் படங்களை அதில் பதிவேற்றம் செய்தனர். இது விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக இந்த விஷம செயல் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நாசாவின் கெப்ளர் பக்கத்தை முடக்கிய நாசா, அதில் இருந்த ஆபாசப் பதிவுகளை நீக்கிவிட்டு, மீண்டும் இணையப் பதிவுகளை துவக்கியுள்ளது.

இதுகுறித்து அந்த ட்விட்டர் பக்கத்தில், 'எங்களின் ட்விட்டர் கணக்கு எதிர்பாராதவிதமாக தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் பணிகள் துவங்கிவிட்டன. புதிய கண்டுபிடிப்புகள் குறித்த பதிவுகள் தொடரும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் அதிமுக்கிய விஞ்ஞான மையமான நாசாவின் ட்விட்டர் பக்கத்திலும் விஷமிகள் ஊடுருவிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்