நிர்வாண சவால் புகழ் பாகிஸ்தான் மாடல் கொலை!

'கடந்த 2015 ம் ஆண்டு நடந்த டி20 கிரிக்கெட் தொடரில்,  பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தினால்  நிர்வாணமாக ஓடுவேன்' என்று அறிவித்திருந்த பாகிஸ்தான் மாடல் அழகி குவான்டில் பலோச்,  அவரது சகோதரராலேயே கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த குவான்டில் பலோச், கடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின்போது இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதுமட்டுமல்லாது,  இணையங்களிலும் தனது கவர்ச்சி புகைப்படங்களை  வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அண்மையில் இம்ரான்கான் கட்சியை சேர்ந்தவரும், மத குருவுமான முஃப்தி அப்துல் குவாய் என்பவருடன் செல்ஃபி எடுத்து,  அதனை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இதனைத் தொடர்ந்து முஃப்தி அப்துல் குவாய் மத நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டது. 

இந்த நிலையில் இன்று குவான்டில், முல்தானில் உள்ள அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.  குவான்டிலை அவரது சகோதரரே கொலை செய்துள்ளதாக பாகிஸ்தான் போலீஸ் அறிவித்துள்ளது. ஆனால் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

குவான்டிலுக்கு 17 வயதிலேயே அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். ஒரு வருடத்திலேயே அந்த பந்தம் முறிவுக்கு வந்தது. தினம் தினம் தன்னை கணவர் சித்ரவதை செய்ததாக குவான்டில் கூறியது உண்டு. அவருடன் குடும்பம் நடத்த முடியாமல், குழந்தையுடன் ஆப்கானிஸ்தானில் உள்ள  தாரூல் அமானில் போய் அகதியாக வாழ்க்கை நடத்தி வந்தார். பின்னர் தாய்நாடு திரும்பிய குவான்டில், அடிக்கடி சர்ச்சைக்குரிய படங்களை வெளியிட்டு வந்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!