மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான, குடியரசுக் கட்சி வேட்பாளர், டொனால்டு டிரம்ப், பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக பெண்கள் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அதிபர் தேர்தலில் ஹிலரி கிளின்டனுக்கும், டிரம்ப்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்நிலையில், நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த ஒரு பெண், டிரம்ப் 30 ஆண்டுகளுக்கு முன்னர் விமானத்தில் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக கூறினார்.

இதேபோல மற்றொரு பெண், 2005-ம் ஆண்டு, தான் பத்திரிகையாளராக இருந்தபோது, ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள டிரம்பின் இல்லத்துக்கு செய்தி சேகரிப்பதற்காகச் சென்றதாகவும் அப்போது,  தன்னிடம் அவர் தவறாக நடக்க முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டினார்.

முன்னதாக டிரம்ப், பிளேபாய் ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கினார். அவர் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், தற்போது பெண்கள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது அவரது செல்வாக்கை குறைப்பதற்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில், டிரம்ப் மீது வைக்கப்பட்டுள்ள இத்தகைய குற்றச்சாட்டுகளை அவரது பிரசாரக் குழு மறுத்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!