மலேசியாவில் ஓடும் பேருந்தில் பயங்கர தீ விபத்து  | Malaysia bus caught fire

வெளியிடப்பட்ட நேரம்: 17:34 (13/10/2016)

கடைசி தொடர்பு:17:39 (13/10/2016)

மலேசியாவில் ஓடும் பேருந்தில் பயங்கர தீ விபத்து 

மலேசியாவில் ஓடும் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், பொதுமக்கள் அலரி அடித்துக்கொண்டு ஓடினர். 

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வங்ச மாஜுக்கு சென்ற பேருந்து, திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் அலரி அடித்துக்கொண்டு பேருந்தைவிட்டு வெளியே ஓடிவந்தனர். அதே நேரத்தில், நடுரோட்டிலேயே பேருந்து முழுவதுமாக தீப்பற்றி எரியத் தொடங்கியது. 

தீ விபத்து குறித்து, தீயணைப்புத் துறையினர் விரைந்து வருவதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து சாம்பலானது. மேலும், பேருந்து தீப்பற்றி எரிந்துகொண்டு இருந்த இடத்தில் அருகில் இருந்த சில வாகனங்கள் மீதும் தீ பற்றிக்கொண்டது. இதனையடுத்து, தீயணைப்பு துறையினர், சாமர்த்தியமாக செயல்பட்டு, தீ மேலும் பரவாமல் இருக்கவும், மற்ற வாகனங்கள் மீது பரவுவதையும் தடுத்தனர். இந்த தீ விபத்தில் உயிர் சேதமோ, காயங்களோ யாருக்கும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close