மூன்று லட்சம் அகதிகள் வரை அனுமதிக்க கனடா முடிவு


கனடா அரசு 2017-ம் ஆண்டுக்கான அகதிகள் ஏற்பு எண்ணிக்கையை அறிவித்துள்ளது. அதன்படி 2017-ம் ஆண்டில் 3 லட்சம் அகதிகள் வரை அனுமதிக்க தயார் என  கனடாவின் அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் ஜான் மெக்கலம் தெரிவித்துள்ளார்.  

கடந்த ஆண்டும் இதே அளவு அகதிகளை தான் அனுமதித்ததாகவும், நாட்டின் மக்கள் தொகை, பொருளாதார நிலையை கருத்தில் கொண்டே இந்த வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. சிரியாவில் உள் நாட்டுப் போர் நிலவி வருவதால் அந்நாட்டைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் அகதிகளாக பிற நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர். அண்மையில் பிரான்சின் காலேஸ் பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த அகதிகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!