பிளாக்பெர்ரியுடன் கைகோர்க்கும் ஃபோர்ட் | Blackberry joins with Ford

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (02/11/2016)

கடைசி தொடர்பு:14:33 (02/11/2016)

பிளாக்பெர்ரியுடன் கைகோர்க்கும் ஃபோர்ட்

கனடாவைத் தலைமை இடமாகக் கொண்ட பிளாக்பெர்ரி, அமெரிக்காவின் ஃபோர்ட் நிறுவனத்துடன் சேர்ந்து 'வருங்காலத்துக்கான கார்களை' உருவாக்க உள்ளது. 


பிளாக்பெர்ரி நிறுவனம் இதற்கு முன் சிறுசிறு நிறுவனங்களுடன் இணைந்து தானியங்கிக் கார்களுக்கான மென்பொருள் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தாலும், முதல் முறையாக ஃபோர்ட் போன்ற ஒரு பெரிய நிறுவனத்துடன் இணைந்து 'ஆட்டோமேட்டிக் கார்' உருவாக்கத்தில் ஈடுபட உள்ளது. 

 

ஃபோர்ட் நிறுவனமும் தொடர்ச்சியாக 'ஆட்டோமேஷனில்' அதிக முதலீடு செய்து வருவதால், இந்த இரு நிறுவனங்களின் கூட்டு, கார் உற்பத்தி சந்தையில் முக்கியத்துவம் பெறுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க