சிறைக்குச் செல்வது பற்றி எனக்கு பயமில்லை - தென் ஆப்ரிக்க அதிபர்

தென் ஆப்ரிக்க அதிபராக இருக்கும் ஜேக்கப் ஜூமா மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவர், சிறைக்குச் செல்வது பற்றி எனக்கு எந்த பயமும் இல்லை என தெரிவித்துள்ளார். 

 

தென் ஆப்ரிக்காவில், கருப்பர்களுக்கு எதிராக சிறுபான்மையினரான வெள்ளையர்கள் ஆட்சி செய்த காலத்தில், பத்தாண்டு காலம் சிறையில் இருந்தவர் ஜூமா. இந்நிலையில், ஊழல் புகார் எழுந்துள்ளது குறித்து, 'ஊழல் புகார் குறித்து என் தரப்பு வாதத்தை கூற வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது ஜனநாயகமற்ற செயல். நான் சிறைக்குப் போவது பற்றி பயப்படவில்லை. போரட்ட சமயங்களில் நான் முன்னரே சிறைக்குச் சென்றவன் தான்.' என்று கூறினார். 

ஜூமா 2009ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல ஊழல் புகார்களை எதிர்கொண்டு வெளிவந்துள்ளார். இப்போது கூறப்பட்டுள்ள புகாரினால், ஜூமா அடுத்த வாரம் நம்பிக்கையில்லா  வாக்கெடுப்புக்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர், இரண்டு முறை நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின்போது, அவருக்கு சாதகமாகத்தான் வாக்குகள் கிடைத்தது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!