காஷ்மீர் விஷயத்தில் ட்ரம்ப் தலையிடுவதாக அறிவித்ததற்கு பாகிஸ்தான் வரவேற்பு

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப், காஷ்மீர் விஷயத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் சமாதானம் செய்து வைக்க விரும்புவதாக கூறி இருந்தார்.


ட்ரம்ப்பின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நஃபீஸ் சகாரியா,'டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம்' என்று கூறினார்.


ட்ரம்ப் அவரது பிரச்சாரத்தின் போது,'பாகிஸ்தான் உலகிலேயே மிக ஆபத்தான நாடு' என்று கூறியுள்ளார். அதே போல, ட்ரம்ப் இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் இப்படி அறிவித்துள்ளது பாகிஸ்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!