'இ-சிகரெட் பயன்படுத்துவதால் போதை பழக்கம் குறையாது'

சிகரெட் பழக்கத்துக்கு மாற்றாக இ-சிகரெட்கள் பயன் தராது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.


உலகம் முழுவதும் புகையிலை தயாரிக்கும் நிறுவனங்கள், சிகரெட்டுக்கு மாற்று இ-சிகரெட் என்று விளம்பரம் செய்து வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு இதை மறுத்துள்ளது.

இது பற்றி உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'இ-சிகரெட், சாதாரண சிகரெட்டுக்கு மாற்று இல்லை. சொல்லப் போனால், சாதாரண சிகரெட்டை விட இ-சிகரெட் மோசமான விளைவுகளுக்கு வித்திடும்' என்று தெரிவித்துள்ளது. பல நாடுகளில் இ-சிகரெட் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இ-சிகரெட்கள் ஆன்லைன் மூலம் அதிகமாக கிடைக்கிறது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!