ஃபேக் நியூஸ்களை தடுக்க களமிறங்குகிறது கூகுள், ஃபேஸ்புக்

இணையத்தில் உளவும் தவறான செய்திகளைத் தடுக்கும் வகையில், புதிய நடவடிக்கையை கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் எடுக்க உள்ளன.

இதுகுறித்து கூகுள் நிறுவனம் கூறுகையில்,'விளம்பரம் செய்வதற்கென்று இருக்கும் 'AdSense' ப்ரோக்ராம் மூலம் தவறான விளம்பரங்கள் வருவதை மாற்றி அமைப்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது' என்று தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு உள்ளேயே இரு வேறு கருத்துகள் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 'ஃபேக் நியூஸ்' பற்றி கடந்த சில தினங்களில் மார்க் சக்கர்பெர்க் இரண்டு முறை பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் கூகுள் இணையதளங்கள் வழியாக தவறான செய்திகள் பரவியதால்தான், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டுக்கு பின்பு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!