இந்தியாவில் 20 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்தம்

இந்தியாவில் 20 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனின் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் உயர் ரத்த அழுத்தம் குறித்து உலகம் முழுவதும் ஆய்வு செய்தனர். அதில் உலகம் முழுவதும் 1.13 பில்லியன் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் சீனாவில் 226 மில்லியன் பேருக்கும், இந்தியாவில் 200 மில்லியன் பேருக்கும் அதாவது 20 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


முக்கியமாக பெண்களை விட ஆண்களுக்கே உயர் ரத்த அழுத்தம் அதிகம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் 597 மில்லியன் ஆண்களும், 529 மில்லியன் பெண்களும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வறுமை அதிகம் காணப்படும் ஆப்ரிக்க நாடுகளில் அதிகளவும் அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, தென்கொரியா போன்ற பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளில் குறைந்தளவும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


ஊட்டச்சத்து குறைபாடுள்ள உணவுகளால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதாகவும், தினசரி உணவுகளில் காய்கறி மற்றும் பழங்களை சேர்த்து கொண்டாலே இந்த குறைபாடு ஏற்படாது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!