வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (17/11/2016)

கடைசி தொடர்பு:17:53 (17/11/2016)

லேண்ட் ரோவரின் மின்சாரக் கார்கள் திட்டம்

பிரிட்டன் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஜாக்குவார் லேண்ட் ரோவர் நிறுவனங்கள், 2020க்குள் தாங்கள் வெளியிடும் சரிபாதி கார்கள் மின்சாரத்தில் ஓடுபவையாக இருக்கும் எனக் கூறி இருக்கிறது. 

மின்சாரத்தில் இயங்கும் தனது முதல் எஸ்.யு.வி வகை காரை, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்தபோது, இந்த புதிய திட்டத்தைப் பற்றி கூறியுள்ளது லேண்ட் ரோவர். அறிமுகப்படுத்திய புது வகை மின்சார எஸ்.யு.வி கார், 2018ல் சந்தைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி லேண்ட் ரோவர் நிறுவனம், 'நாங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கிறோம். எங்கள் உத்திகளை தனித்துவமாக வளர்த்து எங்களின் வாடிக்கையாளர்களுக்கு தேவையானதை அவர்களே தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறோம்' என்று கூறியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க