வெளியிடப்பட்ட நேரம்: 21:37 (19/11/2016)

கடைசி தொடர்பு:17:28 (21/11/2016)

செல்ஃபியால் அதிகம் இறந்தவர்கள் எந்த நாட்டினர் தெரியுமா?

செல்ஃபி எடுக்கும்போது இறந்தவர்களின் எண்ணிக்கையில் உலகிலேயே முதலிடத்தில் இருக்கிறது இந்தியா என்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த கார்நிகி மெலன் பல்கலைக்கழக ஆய்வு. ஆய்வு குழுவினர் செல்ஃபி எடுக்கும் போது ஏற்படும் இறப்பை தடுப்பதற்கு ஆப் ஒன்றையும் உருவாக்கி வருகின்றனர்.அந்த ஆய்வின்படி, முதன்முதலில் செல்ஃபி எடுக்கும்போது இறந்துள்ளதைப் பற்றி, மார்ச் 2014ல் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியானது. அதில் இருந்து கணக்கிட்டதில், 2014 ஆம் ஆண்டு 15 பேரும், 2015ல் 39 பேரும் 2016ல் 73 பேரும் இறந்துள்ளனர்.


இந்த மொத்த இறப்புகளில், இந்தியாவில் செல்ஃபி எடுக்கும் போது இறந்தவர்கள் மட்டும் 76 பேர். இதனால், மற்ற எந்த நாட்டையும் விட, செல்ஃபி எடுக்கும்போது இறந்தவர்களின் எண்ணிக்கையில் முதலில் இருக்கிறது இந்தியா. பெரும்பான்மையான இறப்புகள், அதிக உயரத்தில் இருந்து செல்ஃபி எடுக்கும்போது, நிலை தடுமாறி கீழே விழும்போது ஏற்பட்டவையாகத் தான் உள்ளது என்கின்றனர்.


அவர்கள் உருவாக்கும் ஆப்-பின் படி, மிகவும் அபாயகரமான செல்ஃபியை எடுக்கும் போது, அது ஒரு எச்சரிக்கை சமிக்ஞையைக் கொடுக்குமாம். இதன் மூலம் ஆபத்தான செல்ஃபி எடுக்கும் போது நேரும் இறப்பை தடுக்கலாம் என்று கூறுகிறார்கள் ஆய்வு குழுவினர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க