வெளியிடப்பட்ட நேரம்: 22:33 (21/11/2016)

கடைசி தொடர்பு:17:33 (17/11/2017)

'2050க்குள் 100% மாற்று எரிசக்திக்கு மாறுவோம்'

பருவநிலை மாற்றத்தால் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் என கருதப்படும் 48 நாடுகள், 2050க்குள் முற்றிலும் மாற்று எரிசக்திக்கு மாறுவோம் என்று கூறியுள்ளன.


இந்த 48 நாடுகளில், பருவநிலை மாற்றம் மற்றும் கடல் மட்டம் உயர்வால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள வங்காள தேசம், மாலத்தீவுகள் போன்ற நாடுகளும் அடங்கும். 


சமீபத்தில் அமலுக்கு வந்த பாரீஸ் ஒப்பந்தப்படி, பல முன்னேறிய நாடுகளின் இலக்கு குறைந்த கால அளவில் இருக்கும் நிலையில், இந்த 48 நாடுகள் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளதால், மாற்று எரிசக்திக்கு மாற அவகாசம் அதிகமாக தேவைப்படுவதாக கூறப்படுகிறது.