ஜப்பானில் நிலநடுக்கம் - ஃபுகுஷிமாவில் சுனாமி (வீடியோ)

ஐப்பானின் வடகிழக்குப் பகுதியில் இன்று காலை 2.30 மணி அளவில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. டோக்கியோவுக்கும் ஃபுகுஷிமாவுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் 25 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதனால் ஃபுகுஷிமா அணு உலையை ஒரு மீட்டர் உயர சுனாமி (Video) அலைகள் தாக்கின. இதனால், தானாகவே அணு உலையின் வாட்டர் கூலிங் சிஸ்டம் இயக்கம் நின்றது. இப்போது அணு உலை சீராக இயங்கி வருகிறது. 

 

 

 

2011-ம் ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தில், புகுஷிமா அணு மின் நிலையத்தை சுனாமி அலைகள் தாக்கின. இதில் மூன்று உலைகள் பாதிப்படைந்தன. மேலும், 18,500 பேர் மரணமடைந்ததாக சொல்லப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!