ட்ரம்ப் முதல் 100 நாட்களுக்கு என்ன செய்யப் போகிறார் தெரியுமா?

ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப், அவர் தலைமையிலான அரசு முதல் 100 நாட்களில் எப்படி செயல்படும் என்ற விவரத்தை வீடியோ காட்சி மூலம் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ காட்சியில், 'நிலக்கரி மற்றும் ஷேல் எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க விதிக்கப்பட்டிருக்கும் தடைகளை நீக்குவேன். சுரங்க தொழிலாளர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள போரை முடிவுக்குக் கொண்டு வருவேன். லாபியிங் செய்வதற்கு அதிக கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும். எந்த ஒரு விஷயத்திலும் அமெரிக்காவை முதன்மைபடுத்துவது மற்றும் அமெரிக்காவை மறுபடியும் உன்னதமாக மாற்றுவது தான் என் முதன்மை குறிக்கோள்' என்று கூறியுள்ளார்.

பெரும்பாலான உலக நாடுகள் மாற்று எரிசக்திக்கு மாறிக் கொண்டிருக்கும் நிலையில், ட்ரம்ப் நிலக்கரி மூலம் எரிசக்தி உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த மாதத்தின் முற்பகுதியில் அமலுக்கு வந்த பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்தும் விரைவில் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு வெளியேறும் என்று பரவலாக கூறப்படுகிறது. காரணம், ட்ரம்ப், பருவநிலை மாற்றம் என்பது பொய் என்று தொடர்ச்சியாக கூறி வருபவர். 


 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!