வெளியிடப்பட்ட நேரம்: 22:44 (26/11/2016)

கடைசி தொடர்பு:22:45 (26/11/2016)

'ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு சர்வாதிகாரி' - ட்ரம்ப்

க்யூபா நாட்டின் முன்னாள் அதிபர்  ஃபிடல் காஸ்ட்ரோ உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் கூறுகையில், 'காஸ்ட்ரோ ஒரு மிருகத் தன்மை மிகுந்த சர்வாதிகாரியாக இருந்தார். சொந்த நாட்டு மக்களையே நீண்ட ஆண்டுகள் ஒடுக்கி வைத்திருந்தார். க்யூபா ஒரு சர்வாதிகார நாடாக இருந்தது. இனி அந்த நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். குறிப்பாக க்யூபா மக்கள் இனி சுதந்திரமாக செயல்படலாம்' என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் காஸ்ட்ரோவின் மறைவுக்கு தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் ஒபாமா இரங்கல் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க