யோகாவிற்கு யுனெஸ்கோ அளித்த கிஃப்ட்!

இந்தியாவின் பாரம்பரிய கலையான யோகா, யுனெஸ்கோவின் பெருமைக்குரிய கலாசார பொக்கிஷங்கள் (Intangible world heritage) பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது குறித்து யுனெஸ்கோ நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. 

 


யோகா கலையை சிறப்பிக்கும் வகையில் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் என்று ஐ.நா சபை அறிவித்தது. தற்போது யுனெஸ்கோ, பாதுகாக்கப்படவேண்டிய பாரம்பரிய பொக்கிஷங்கள் பட்டியலில் யோகாவை இணைத்துள்ளது. யுனெஸ்கோ நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், யோகா என்னும் கலை வயது வித்தியாசமின்றி அனைவரும், மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் பெற வழிவகுப்பதாக குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் யோகா கலையுடன் க்யூபா மற்றும் பெரு நாட்டின் நடனங்களும் கலாசார பொக்கிஷங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!