வெளியிடப்பட்ட நேரம்: 19:48 (02/12/2016)

கடைசி தொடர்பு:10:38 (03/12/2016)

தினமும் 800 மில்லியன் பேர் பசியுடன் உறங்குகின்றனர்

ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய குழு நடத்திய ஆய்வில் உலகில் தினசரி 800 மில்லியின் பேர் இரவு தூங்க செல்லும்போது, பசியுடன் செல்வதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், 1.9 பில்லியன் பேருக்கு உடல் பருமன் பாதிப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இவற்றை கண்டுகொள்ளாவிடின் 2035-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் பாதி பேருக்கு இந்த பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் தேவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மோசமான உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சி இல்லாமையும் உடல் பருமனுக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க