வெளியிடப்பட்ட நேரம்: 21:59 (07/12/2016)

கடைசி தொடர்பு:13:11 (24/11/2017)

100% மாற்று எரிசக்தியை நோக்கி கூகுள்

கூகுள் நிறுவனம் அதன் 13 டேட்டா மையங்களும் 2017-க்குள் முழுக்க மாற்று எரிசக்தி மூலம் இயங்கும் எனக் கூறியுள்ளது. சில ஆண்டுகளாகவே 100% மாற்று எரி சக்திக்கு மாறும் வகையில், கூகுள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. காற்றாலை மற்றும் சூரிய மின் சக்தியை நிறுவுவதற்கு ஆகும் செலவு 60%-80% குறைந்துள்ளது தான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. அதே போல, கூகுள் நிறுவனத்துக்கு அமெரிக்க அரசு மாற்று எரிசக்தி பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக அதிக அளவு வரி குறைப்பு செய்தது. ஆனால், டொனால்ட் ட்ரம்ப் அதிபர் பதவி ஏற்க உள்ளதால் இந்த வரி குறைப்பு விலக்கப்படும் எனக் கூறப்படுகிறது.