அமெரிக்காவின் 'ஆப்பிள்' நகரின் மேயராக இந்திய வம்சாவளிப் பெண்!


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள குபெர்டினோ நகரத்தின் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சவிதா வைத்தியநாதன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம் இருக்கும் நகரம் இதுதான். குபெர்டினா நகரத்திற்கு மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஒருவர் வருவது இதுவே முதல்முறை.

20 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் வசிக்கும் சவிதா, அங்குள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராக பணியாற்றி வருவத்தோடு, வங்கி வணிகத் துறை அதிகாரிகாவும் இருக்கிறார்.

சவிதா டெல்லி பல்கலைக்கழகத்தில் B.A வும் லக்னோ பல்கலைக்கழத்தில் ஆசிரியர் படிப்பும் எம்.பி.ஏ படிப்பை அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் ஸ்டேட் பல்கலைக்கழத்தில் படித்தார்.
சவிதாவின் கணவர் வைத்தியநாதன்.   அனகா எனும் பெண் இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!