செல்போன் தயாரிப்பை நிறுத்தியது 'ப்ளாக்பெரி' | Blackberry phone stopped manufacturing phones

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (17/12/2016)

கடைசி தொடர்பு:17:10 (17/12/2016)

செல்போன் தயாரிப்பை நிறுத்தியது 'ப்ளாக்பெரி'

கனடாவைச் சேர்ந்த ப்ளாக்பெரி நிறுவனம், தனது மொபைல் ஃபோன் உற்பத்தி செய்யும் உரிமைகளை சீனாவின் டி.சி.எல் (TCL) நிறுவனத்துக்கு விற்றுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இந்த ஒப்பந்தத்தைப் பற்றி பேசிவரப்பட்ட நிலையில், இன்று முதல் அது அமலுக்கு வருகிறது. இதன் மூலம் போன்களுக்கு தேவையான ஹார்ட்வேர்களை உற்பத்தி செய்யாமல் மென் பொருட்களை தயாரிப்பதில் மட்டும் கவனம் செலுத்த உள்ளது ப்ளாக்பெரி.  இருப்பினும் இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா, வங்கதேசம் மற்றும் நேபாள நாடுகளில் ப்ளாக்பெரி வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்ய பேசி வருகிறதாம். ஆகையால் இந்த நாடுகளில் மட்டும் இந்த ஒப்பந்தம் செல்லாது என்று கூறப்படுகிறது.

ப்ளாக்பெரி நிறுவனம் டி.சி.எல் நிறுவனத்துக்கு போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தில், 'ப்ளாக்பெரி ஃபோன்களை வடிவமைக்க, உற்பத்தி செய்ய, விற்க மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க டி.சி.எல் நிறுவனத்துக்கு உரிமை உள்ளது' என கூறப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க