வெளியிடப்பட்ட நேரம்: 02:33 (18/12/2016)

கடைசி தொடர்பு:03:55 (18/12/2016)

பாகிஸ்தானில் மீண்டும் இந்திய சினிமாக்கள்!

உரி தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் திரையிடுவதற்கு, தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை முதல் அங்கு இந்தியத் திரைப்படங்கள் மீண்டும் திரையிடப்படும் என அந்நாட்டு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் லஹரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் திரைப்பட உரிமையாளர்கள் சங்கத் தலைவர் லஹரி கூறுகையில், "இந்திய திரைப்படங்களை திரையிடுவதில், பாகிஸ்தானில் பல திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் இந்தியப் படங்கள் திரையிடாததால், அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாளை முதல் பாகிஸ்தானில் மீண்டும் இந்திய திரைப்படங்கள் திரையிட முடிவு செய்துள்ளோம்". என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க