கைப்பற்றியதை அமெரிக்காவிடமே திருப்பியளித்த சீனா!

அமெரிக்காவின் ட்ரோன்(Drone) சாதனத்தை அந்த நாட்டிடமே திருப்பியளித்துவிட்டதாக சீனா இன்று அறிவித்துள்ளது. தென் சீன கடல் பகுதியில் ஆழ் கடலடி ஆராய்ச்சிக்காக பயன்படுத்திய அமெரிக்காவின் ஆளில்லா சாதனத்தை, உளவுப் பார்க்க பயன்படுத்தப்பட்ட சாதனம் என சந்தேகித்து கடந்த வியாழன் அன்று  சீனா கைப்பற்றியது. அது ஆராய்ச்சிக்காக  பயன்படுத்தப்பட்ட சாதனம் என அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. மேலும் சீனாவின் செயலைக் கண்டித்து ட்ரம்ப்  ஆவேசமாக ட்வீட் செய்தார். இந்நிலையில் சீனா இன்று அமெரிக்காவிடம் ட்ரோனை திருப்பியளித்துவிட்டதாக அறிவித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!