ரசிகர் கைது: அஃப்ரிடி வேதனை

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சயித் அஃப்ரிடியின் பெயர் பொறித்த டி-சர்ட்டை அணிந்ததற்காக, அசாமில் சவுத்திரி என்ற இளைஞர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து அஃப்ரிடி, 'இது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளிலுமே கிரிக்கெட் ரசிகர்கள் அதிகளவு உள்ளனர். கைது செய்வதால் ரசிகர்கள், தங்களுக்கு பிடித்த வீரர்களை ஆதரிப்பது நின்று விடாது. குறிப்பாக நாகரிகம் வளர்ச்சியடைந்துள்ள நாடுகளில் இதுபோன்று விஷயங்களை தடுக்க முடியாது' எனக்கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!