வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (24/12/2016)

கடைசி தொடர்பு:16:57 (24/12/2016)

ஃபேஸ்புக்கில் புதிய வசதி...

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் ஃபோன்களில் ஃபேஸ்புக் சமூக வலைதளம் 'ஸ்லைட்ஷோ' (Slideshow) வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி ஏற்கனவே ஆப்பிள் நிறுவன ஃபோன்களில் இந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தியது ஃபேஸ்புக். இந்த வசதியின் மூலம், பின்னணி இசை, டைட்டில்களுடன் கூடிய சிறிய வீடியோவை உருவாக்கி பகிர முடியும்.

தற்போது, ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் இந்த வசதியை வெளியிடுவதற்கு முன்னோட்ட சோதனையில் ஃபேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. பல அப்டேட்களை அறிமுகப்படுத்தி வரும் ஃபேஸ்புக் இந்த புதிய வசதியை சீக்கிரமே வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க