பாகிஸ்தான் அமைச்சரின் தவறான ட்வீட்

பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தனது, ட்விட்டர் பக்கத்தில் 'சிரியாவுக்கு பாக்., படைகளை அனுப்பினால், அணு ஆயுத தாக்குதலால் பாகிஸ்தானை அழித்து விடுவோம் என இஸ்ரேல் கூறியுள்ளது. எங்களிடமும் அணு ஆயுதம் இருப்பதை மறக்க வேண்டாம்' என கூறியிருந்தார். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு தாங்கள் மிரட்டல் விடுத்ததாக, ஆசிஃப் கூறியதற்கு இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சகம், 'தாங்கள் அப்படி கூறவில்லை என்றும் பாகிஸ்தான் அமைச்சர் கூறியதில் உண்மை இல்லை என்றும்' கூறியது. தவறான செய்தி ஒன்றை பார்த்து ஆசிஃப் ட்விட்டரில், கருத்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!