12 வருடங்கள் ஆகியும் அடையாளம் காணமுடியவில்லை!! | 400 victims of 2004 tsunami remain unidentified in Thailand 

வெளியிடப்பட்ட நேரம்: 17:16 (26/12/2016)

கடைசி தொடர்பு:17:29 (26/12/2016)

12 வருடங்கள் ஆகியும் அடையாளம் காணமுடியவில்லை!!

ஆசியாவை சுனாமி பேரலைகள் தாக்கி பன்னிரண்டு வருடங்கள் கடந்துவிட்டது. 2004-ம் ஆண்டு, நேரிட்ட இந்த இயற்கை பேரிடர், டிசம்பர் 26-ம் தேதி,  2 லட்சத்து 26 ஆயிரம் பேரை வாரி சுருட்டிக்  கொண்டு போனது. தாய்லாந்து, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டவை. தாய்லாந்தில் மட்டும் 5,395 பேர் பலியானார்கள். அவர்களில் சுமார் 400 பேர்  யாரென்றே இன்றுவரை அடையாளம் காணமுடியவில்லை என அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. ’சுனாமியில் பலியான 4000-5000 பேரின் உறவினர்களை தேடிப் பிடித்து தொடர்பு கொண்டு உடல்களை ஒப்படைத்துள்ளனர். மீதமுள்ள 400 பேரின் உடல்களை அடையாளம் காண முடியாமல், உறவினர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை’, என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close