டிஜிட்டல் கரன்சி - அங்கேயே வரப்போகுது, இங்கே எப்போ வரும்?

ஒன்றரை கோடி மக்கள் வசிக்கும் செனகல் நாட்டில் (வடக்கு ஆப்ரிக்கா) நாட்டின் மத்திய வங்கி eCFA எனப்படும் டிஜிட்டல் கரன்சியை (இ-செனகல் பிராகங்) விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறார்கள். செனகல் மட்டுமல்லாது செனகலை சுற்றியுள்ள பெனின், மாலி, நைஜர், டோகோ ஆகிய மற்ற நாடுகளும் இந்த கரன்ஸியை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன. வடக்கு ஆப்ரிக்க நிதி மையமும் செனகல் நாட்டின் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறது.  

டிஜிட்டல் கரன்சி

இந்த இ-கரன்சி தாள் ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் எம்பேசா (MPesa) போன்ற மின்-வர்த்தக தளத்தில் எளிதாக இணைந்து செயல்படும் படி வடிவமைத்துள்ளார்கள். அந்த நாட்டில் உள்ள  பேடிஎம் (Paytm) போன்ற கம்பெனியான பின்டெக் (financial technology (fintech) ) இந்த அறிவிப்பால் மிகவும் பலன் அடைவார்கள் என்பது எளிதாக புரியக்கூடியதே. எம்பேசா எப்படி வங்கி கணக்கில்லாத கோடிக்கணக்கான ஆப்ரிக்கர்களுக்கு உதவுகிறதோ, அதே போல இ-பிராங்க் உதவும் என்பது செனகல் நாட்டு பொருளாதார நிபுணர்களின் கணிப்பு.  

இதை செனகல் நாட்டுக்கு செய்து கொடுப்பவர்கள் இ-கரன்சி மின்ட் என்கிற மென்பொருள் நிறுவனம். அதன் சி.இ.ஓ ஜோனதன் தர்மபாலன் சொல்வது ஆச்சர்யமளிக்கிறது - சாதாரண பணத்தில் இருக்கும் கவர்னர் கையெழுத்து, சீரியல் நம்பர், வாட்டர்மார்க் எல்லாமே இந்த இ-கரன்சியிலும் இருக்கும். ஆனால் அதே நேரம் அதாவது உங்கள் பணம் எங்கே எப்படி செலுத்துகிறீர்கள், அது எங்கே போகிறது என்று மிகச்சரியாக சொல்லமுடியும்.

இ-கரன்சி மிண்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள புதிய தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு நாட்டின் மத்திய வங்கியே டிஜிட்டல் கரன்சியை வெளியிட முடியும். அந்த பணத்தை மற்ற வங்கிகளும் தனித் தனி லாக்கர் போல மெயின்டெயின் செய்ய முடியும். மையப்புள்ளியாக - ஒரு கோயில் கோபுரத்தின் கலசம் போல மத்திய வங்கியும், அதன் கீழே தனித்தனியாக மற்ற வங்கிகளும் செயல்படவேண்டும். 

 மத்திய வங்கியில் பெற்ற இ-கரன்சி இணையமற்ற ஆப்லைன் முறையில் பொது மக்களின் பயன்பாட்டுக்கு புழக்கத்தில் விடப்படும் . தேவை ஏற்படும்போது மத்திய வங்கி அந்த லாக்கரை தொடர்புகொள்ளமுடியும்.  ஒரு முறை பரிவர்த்தனைக்கு கொடுத்த பணம் புழக்கதில் போன பிறகு  தேவை ஏற்படும்போது தொடர்புகொண்டால் மத்திய வங்கி மேலே மின்-பணம் கொடுக்க முடியும்.  உதாரணமாக ரிசர்வ் வங்கி பாரத ஸ்டேட் வங்கிக்கு ஒரு லட்சம் கோடி இ-ரூபாய் கொடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், அந்த ஒரு லட்சம் கோடியை பாரத ஸ்டேட் வங்கி பரிவர்த்தனை செய்யலாம், எந்த சீரியல் நம்பர்கள் என்பது மத்திய வங்கிக்கு தெரியும். ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த வகை வங்கி பரிவர்த்தனையை மிகவும் பாதுகாப்பாக செய்ய முடியும் என்று உறுதியளிக்கிறார்கள். ஒருவர் வங்கியில் குறிப்பிட்ட தொகையை எடுக்கிறார் என்றால் அவருக்கு கொடுத்த ரூபாய் எண்களின் மூலம் அந்த பணம் அவரிடம்தான் இருக்கிறது என அறிந்து கொள்ளமுடியும். தேவைப்பட்டால் அவரும் க்யூ ஆர் கோடு மூலமாக அந்த பணத்தை டிஜிட்டல் பணமாக மாற்றி இணைய வர்த்தகம் செய்யலாம். அப்படி குறிப்பிட்ட எண்ணுக்கு உரிய பணத்தை செலவு செய்துவிட்டால் தாளில் அச்சடிக்கப்பட்ட பணம் செல்லாதவையாகிவிடும். மேலும் உதாரணமாக, புதிய கரன்ஸி கொடுக்கவேண்டும் என்றால், பாரத ஸ்டேட் வங்கிக்கு கொடுக்கப்பட்ட எல்லா பணத்தையும் அப்படியே மாற்றிவிட்டு புதிய இ-கரன்ஸி தரமுடியும். இதன் மூலம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணம் எந்த மொபைல் ஆப்பிலும் வேலை செய்யாது. அதை வங்கிகளில் மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை. எவ்வளவு எளிது பார்த்தீர்களா ?

 

. ஈக்வேடார் நாட்டு அரசு கடந்த ஆண்டு முதல் டிஜிட்டல் கரன்சி வெளியிட்டுவிட்டது. கள்ளப்பணத்தை ஒழிக்க வேண்டும் என்றால் இதுவே சரியான வழியாக இருக்கும் என்கிறனர் இ-கரன்சியை ஆதரிக்கும் தொழில்நுட்பத்துறையை சார்ந்தவர்கள். 

- செந்தழல் ரவி 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!