இந்தியாவுக்கு போக வேண்டாம்: இஸ்ரேல் எச்சரிக்கை

 


இந்தியாவில் இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகள் தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இஸ்ரேல் நாடு எச்சரித்துள்ளது. 


இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமாக சுற்றிபார்க்க வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. குறிப்பாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை தினங்களில் அதிகமானோர் இந்தியா வருவார்கள். 


இந்நிலையில் இந்தியாவுக்கு இஸ்ரேல் நாட்டினர் சுற்றுலா செல்ல வேண்டாம் என்றும் இந்தியாவில் இஸ்ரேல் உள்ளிட்ட மேற்கத்திய நாட்டு சுற்றுலாப் பயணிகள் தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இஸ்ரேல் எச்சரித்துள்ளது.


குறிப்பாக இந்தியாவின் தென்மேற்கு பகுதிகளில் தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக இந்தியாவில் உள்ள இஸ்ரேல் நாட்டினர் மால், மார்க்கெட், பீச் உள்ளிட்ட பகுதிகளில் நடமாட வேண்டாம் என்றும், இஸ்ரேலில் உள்ளவர்கள் இந்தியாவுக்கு செல்லவேண்டாம் என்றும் இந்தியாவில் தங்கியுள்ள தங்களது உறவினர்களுக்கும் இதனை அறிவுறுத்துமாறு அந்நாட்டின் பிரதம மந்திரி அலுவலகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தாக்கப்படுவதற்கான  காரணங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!