வெளியிடப்பட்ட நேரம்: 23:06 (05/01/2017)

கடைசி தொடர்பு:23:05 (05/01/2017)

நல்லெண்ண அடிப்படையில் 219 மீனவர்கள் விடுவிப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்திற்காக பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்ட 219 மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

கடந்த 10 நாட்களில் மட்டும் பாகிஸ்தான் அரசு நல்லெண்ண அடிப்படையில் 439 இந்திய மீனவர்களை விடுவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த டிசம்பர் 25-ம் தேதி பாகிஸ்தான் சிறையில் இருந்த 220 மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.

'சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் வாகா எல்லையில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர்.' என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க