Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரேசில் சிறையில் மீண்டும் கலவரம்: 31 பேர் பலி

பிரேசில் நாட்டின் சிறையில், கைதிகளுக்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட கலவரத்தில் 60 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு பலி தீர்க்கும் விதமாக, அங்குள்ள போதைப் பொருள் கடத்தல் கும்பல் ஒன்று, சிறையில் கொடூர தாக்குதலை நடத்தினர்.

இதில் 31 கைதிகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக மிகவும் கடுமையான ஆயுதங்களுடன், இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரேசில் நாட்டு சிறைகளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்நிலையில் அங்கு சிறையில் நடந்த, அடுத்தடுத்த வன்முறை சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement