புத்தாண்டில் வாட்ஸ்அப் இவ்ளோ பிசியா...

Watsapp

2016 டிசம்பர் 31-ம் தேதி வாட்ஸ்அப்பின் மூலம் அனுப்பப்பட்ட மெசேஜ்கள் எவ்வளவு என்ற புள்ளி விவரம் வெளியாகியுள்ளன. அன்று ஒரே இரவில் மட்டும், உலக அளவில் 63 கோடி மெசேஜ்கள் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. இதில், இந்தியாவில் மட்டும் 14 கோடி மெசேஜ்கள் அனுப்பப்பட்டதாம். புகைப்படம், வீடியோ, GIF என அனைத்தும் அடங்கும். 

மொத்தம் அனுப்பப்பட்ட 63 கோடி மெசேஜ்களில் 7.9 கோடி புகைப்படங்கள், 2.4 கோடி வீடியோக்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் மூலம் GIF ஃபைல்கள் அனுப்பப்படும் வசதி 2 மாதங்களுக்கு முன்புதான் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!