வெளியிடப்பட்ட நேரம்: 08:04 (19/01/2017)

கடைசி தொடர்பு:08:04 (19/01/2017)

மூச்சு விட திணறும் பீஜிங் டிராகன்!

பீஜிங்

கடந்த வாரத்தில் ஒரு நாளை இயல்பாக தொடங்க அந்த மிகப்பெரிய நகரம் தயாராகி கொண்டிருந்தது. திடீரென அரசு இன்று "நீல வானம்" (blue sky)  என்று  அறிவித்தது. மக்கள் தங்களின் முகத்தில் முகமூடிகளோடு தங்களது நாளை தொடங்க தயாராகின்றனர்.அந்த நகரம் சீனாவின் தலைநகரம் பீஜிங். நீல வானம் என்று மக்களை அரசு எச்சரித்தது, அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றில் கலந்திருக்கும் மாசு உச்சகட்ட அளவை எட்ட போகிறது என்பதற்கான ஒரு அபாய குறியீடு.

கடந்த சில வருடங்களாக பீஜிங் மக்களுக்கு காற்று மாசுபாடு என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.. அந்த காற்று மாசுபாட்டின் அடர்த்தி, விண்வெளியில் இருந்து பார்க்கும் போது பீஜிங்கை மறைத்துவிடும் என்பதிலேயே அதன் தீவிரம் புரியும். பீஜிங்கில் ஒரு மணி நேரம் சுவாசிப்பது என்பது இரண்டு சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம். பீஜிங் வாசிகளின்  நிலைமை தற்பொழுது மிகவும் மோசம் . முகமூடி இல்லாமல் இயல்பாக சுவாசிக்க முடியாது என்ற நிலைமை.காற்று மாசடைவதை குறைக்கவும் அதை தவிர்க்கவும் அரசுக்கு செலவாகும் தொகை வருடத்திற்கு 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

என்ன காரணம்?

சீனா இந்த அளவிற்கு மாசடைய முக்கிய காரணம் அதன் தொழில்மயமாக்கல் கொள்கை. அங்கே எப்பொழுது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி கிடைக்கும். அவர்களின் பொருளாதார கொள்கை அப்படி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு புறம் அதிகரிக்க மறு புறம் காற்றின் மாசுபாடு இரண்டு மடங்கு அதிகரித்தது.

உலகில் அதிகம் நிலக்கரி பயன்படுத்தும் நாடுகளில் முதலிடம் சீனாவிற்குத்தான். வருடத்திற்கு  2.73 பில்லியன் டன்களுக்கும் குறையாமல் எரித்து தள்ளுகிறது. இது உலகளாவிய நிலக்கரி பயன்பாட்டில் கிட்டத்தட்ட பாதி. சீனாவின் மின்சார பயன்பாடு அதிகம் என்பதால் அதற்காக காலம் மின் நிலையங்களை அதிகம் பயன்படுத்துகிறது அதில் வெளியேறும் புகைதான் காற்று மாசுபட முக்கியமான காரணம்.

தொழிற்சாலைகள் இயங்கும் போது வெளியாகும் புகையும் காற்று மாசுபாட்டை அதிகரிக்கிறது.

பீஜிங் நகரத்தில் இயங்கும் கார்களின் எண்ணிக்கையால் பகல் நேரங்களில் காற்றில் அதிக அளவு மாசு துகள்கள் கலக்கின்றன.

சீனாவில் புகைப்பழக்கம் சாதாரணமாக ஒன்று அதன் காரணமாகவும் காற்றில் அதிகளவில் நச்சு வாயுக்கள் அதிகரிக்கிறது

இவ்வளவு மோசமான நிலையிலும் கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இட நெருக்கடியின் காரணமாக அடுக்குமாடி கட்டுமானங்கள் உருவாகி கொண்டே இருக்கின்றது. இதுவும் குறுகிய காலத்தில் காற்று மாசடைய முக்கிய காரணம்...

சீனா

என்ன செய்யப்போகிறது சீனா?

2000 ம் ஆண்டிலேயே காற்று மாசுபாடு அரசுக்கு தெரிந்தாலும் அதை அலட்சியப்படுத்தியது. ஆனால் காலநிலை மாற்றம், மக்களிடையே சுவாசக் கோளாறுகள் ஆகியவை அதிகமான பின்புதான் காற்று மாசுபாட்டின் தீவிரம் அரசுக்கு புரிந்தது அதன் பின்பே அதை குறைக்கும் வகையில் திட்டங்களை கொண்டு வந்தது ...

கார்களின் பயன்பாட்டை குறைப்பதற்காக வாகன எண்கள் மூலமாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியது. அதனால் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.

சைக்கிள் பயன்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது அதன் மூலமாக சைக்கிள் உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கையும்  அதிகரித்தது

பழைய தொழில்நுட்பத்தில் இயங்கும் தொழிற்சாலைகளை புதிய தொழில்நுட்ப்பத்திற்கு மாற அறிவுறுத்தியது.

கிரீன் பெல்ட் எனப்படும் பசுமை வளையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது..

நிலக்கரி பயண்பாட்டை குறைக்கும் வகையில் மாற்று எரிபொருள் பயண்பாட்டை அதிகப்படுத்தியுள்ளது.

காற்றில் அதிக மாசுக்கள் கலப்பதற்கு காரணமாணவர்களை  கண்டறிய தனியே துறை ஒன்றை ஆரம்பித்து கடுமையான தண்டனைகளை கொடுக்கின்றனர்..

சீன அரசின் தீவிர முயற்சிகள் கடந்த இரண்டு வருடங்களாக பலனளித்து வருகின்றன கடந்த வருடம் 198 நாட்கள் மாசில்லாத காற்றை சுவாசித்தது ஆனால் எதிர்பாரத விதமாக புது வருட கொண்டாட்டங்களால் மீண்டும் காற்றில் நுண்துகள்கள் அதிகரித்து மூச்சு விட தினறியது பெய்ஜிங் அதனால் இந்த வருடம் கடந்த வருடத்தை காட்டிலும் கடுமையாக மாசு விதிகள் கடைபிடிக்கப்படும் என அறிவித்துள்ளது சீன அரசாங்கம்.

பீஜிங்கை மிஞ்சும் இந்தியா...

கடந்த 2013 ஆம் ஆண்டில் வெளியாக உலகின் அதிகமான காற்று மாசடைந்த நகரங்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் ஏழு நகரங்கள் சீனாவை சேர்ந்தவையாக இருந்தன. ஆனால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் அதிர்ச்சியளிக்கும் விதமாக அதிக இடங்களை பிடித்திருப்பது இந்தியாவின் நகரங்கள் தான். அதற்கு எதிர்மறையாக சீனா அந்த இடங்களை இரண்டாக குறைத்திருக்கிறது.

சீனா என்ன தவறை செய்ததோ அதே தவறை இந்தியா செய்ய ஆரம்பித்திருக்கிறது எடுத்துக்காட்டாக நிலக்கரி பயன்பாடு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. நிலக்கரி பயன்பாட்டில் சீனாவிற்கு அடுத்த இடம் நமக்குத்தான்.வாகனங்களின் பயன்பாடும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது .

இந்தியாவில் காற்று மாசடைதல் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மோசமாக உள்ளது உடனடி நடவடிக்கைகள் தேவை என  உச்சநீதிமன்றம் இது தொடர்பான வழக்கில் அறிவுறுத்தியதை முக்கியமான எச்சரிக்கையாக எடுத்து செயல்பட வேண்டும் இல்லையென்றால் இந்தியா இன்னொரு பிஜிங்காக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.

- மு.ராஜேஷ் (மாணவப் பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்