2016தான் மிக வெப்பமான ஆண்டு!

Sea melting

2016-ம் ஆண்டுதான் பதிவு செய்யப்பட்டதிலேயே மிக வெப்பமான ஆண்டு என்று நாசா மற்றும் NOAA அமைப்புகள் கூறியுள்ளன. 2014 மற்றும் 2015-ம் ஆண்டை தொடர்ந்து 2016-ம் ஆண்டிலும் மிக அதிகமான சராசரி வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

'இது மிகவும் எதிர்பாராதது. ஆனால் இந்த முடிவுகள் கூறுவது என்னவெனில், க்ரின் ஹவுஸ் வாயுக்கள் மற்றும் கார்பன் டை ஆக்ஸைட் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பதை உணர்த்துகிறது' என்று நாசா கூறியுள்ளது. 

2016-ம் ஆண்டு நிலப்பரப்பு மற்றும் கடற்பரப்பில் நிலவிய சராசரி வெப்பநிலை அளவு 58.69 டகிரி ஃபார்ன்ஹீட் ஆகும். இது 20-ம் நூற்றாண்டில் நிலவிய சராசரி வெப்பநிலை அளவை விட 1.69 டிகிரி அதிகம். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!